கொள்ளையர்களை துரத்திய போது போலீஸ் ஜீப் விபத்தில் சிக்கியது

சூலூர் அருகே அதிகாலையில் கொள்ளையர்களை துரத்திய போது போலீஸ் ஜீப் விபத்தில் சிக்கியதில் இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-09-09 19:00 GMT
சூலூர்


சூலூர் அருகே அதிகாலையில் கொள்ளையர்களை துரத்திய போது போலீஸ் ஜீப் விபத்தில் சிக்கியதில் இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார்.


இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


போலீசார் ரோந்து


கோவையை அடுத்த சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக் டராக பணியாற்றி வருபவர் மாதையன். இவர் நேற்று அதிகா லை 2.45 மணியளவில் போலீசாருடன் சேர்ந்து தென்னம் பாளையம் பிரிவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக பதிவு எண் (நம்பர் பிளேட்) இல்லாத மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் சென்றனர்.


அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அதிவேகமாக சென்றனர். உடனே இன்ஸ்பெக்டர் மாதையன், போலீஸ் ஜீப்பில் அந்த வாலிபர்களை துரத்தினர். ஜீப்பை டிரைவர் சிவக்குமார் ஓட்டினார்.


இரும்புத்தடுப்பில் ஜீப் மோதியது


5 கிலோ மீட்டர் தூரம் விரட்டிய போதும் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் சென்ற னர். டிரைவர் சிவக்குமார் ஜீப்பை வேகமாக ஓட்டிச் சென்று மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் இடித்தார். இதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் தூக்கி வீசப்பட்ட னர். ஆனாலும் அவர்கள் சுதாரித்துக் கொண்டு இருட்டில் தப்பி ஓடி மறைந்தனர்.


இதற்கிடையே போலீஸ் ஜீப் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவே இருந்த இரும்பு தடுப்புக் கம்பியில் மோதியது. இதில் ஜீப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் மாதையனின் இடது கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிவக்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.


ஆயுதங்கள் பறிமுதல்


அவர்களை மற்ற போலீசார் மீட்டு நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இன்ஸ்பெக்டர் மாதையனுக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ததாக கூறப் படுகிறது. மேலும் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


இதற்கிடையே கொள்ளையர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் கைப்பையை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர். அதில் கைப்பையில் பட்டாக்கத்தி, அரிவாள், வீடுக ளை உடைக்க பயன்படுத்தும் இரும்பி கம்பி 2, ஸ்குரு டிரைவர், கையுறை, 2 டார்ச்லைட், சிறிய கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


மேலும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பயங்கர ஆயுதங்களுடன் அதிகாலை சுற்றித்திரிந்த வாலிபர்கள் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரியவந்தது.


வாலிபர்களுக்கு வலைவீச்சு


இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு கருமத்தம்பட்டி அருகே கணியூர் கங்காலட்சுமி தோட்டத்தில் ஒரு வீட்டில் தனியாக இருந்த பாப்பம்மாள் (வயது 72) படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் இதுவரை துப்புத் துலங்க வில்லை. அந்த கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


இந்த நிலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் தப்பி சென்ற 2 பேருக்கு கொலை வழக்கில் எதுவும் தொடர்பு இருக்குமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை துரத்திய போது போலீஸ் ஜீப் விபத்தில் சிக்கி இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்