பூங்கொத்துக்கு பதில் புத்தகம்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

கருத்தாழமிக்க புத்தகங்களை மட்டும் வழங்கினால், நான் பெருமகிழ்ச்சி அடைவேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-06 04:24 GMT

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலிலும், அதனையடுத்து நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும், கழகம் மகத்தான வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு பணியாற்றி வரும் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும், என்னை நேரில் சந்திக்க வரும்போதும், கழக நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கும்போதும், என்மீது கொண்ட பேரன்பின் காரணமாக பூங்கொத்து வழங்குவதை, இனிவரும் வரும் காலங்களில் கண்டிப்பாக தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இருப்பினும், கழகப் பொதுச் செயலாளராகிய என்மீது நீங்கள் அனைவரும் கொண்டிருக்கும் பாசத்தின் காரணமாக என்னை சந்திக்கும்போது, தங்களால் முடிந்தால் கருத்தாழமிக்க புத்தகங்களை மட்டும் வழங்கினால், நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.

கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் எனது இந்த அன்பு வேண்டுகோளை அவசியம் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்