மரத்தில் ஏறி புளியம்பழம் பறித்த போதுமின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலி

மரத்தில் ஏறி புளியம்பழம் பறித்த போது மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலியானார்.

Update: 2023-02-23 20:41 GMT
மரத்தில் ஏறி புளியம்பழம் பறித்த போதுமின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலி

சங்ககிரி, 

சங்ககிரி டி.பி.ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). மெக்கானிக்கான இவர் தனது வீட்டின் அருகே பவானி மெயின்ரோடு பச்சகாடு பகுதியில் உள்ள நெடுஞ்சாலைக்கு சொந்தமான புளியமரத்தில் புளியம் பழம் பறிக்க குத்தகைக்கு எடுத்து இருந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் 1.30 மணியளவில் முருகேசன் புளிய மரத்தில் பழம் பறிக்க சென்றார். அங்கு மரத்தின் உச்சியில் ஏறி விளிம்பில் அமர்ந்து கொண்டு இரும்பு கொக்கியுடன் கூடிய கம்பை கொண்டு புளியங்காய்களை உலுக்கினார். அப்போது அருகில் சென்ற மின்சார கம்பியை கவனிக்காமல் அவர் மரக்கிளையை உலுக்கிய போது, மின்சார கம்பி அவர் மீது எதிர்பாராதவிதமாக உரசியதில் மின்சாரம் பாய்ந்தது.

அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியில் மரத்தில் இருந்து கீழே விழுந்த முருகேசனுக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு ெசன்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முருகேசன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்