நாம் எப்போது சென்னையில் சைக்கிளிங் செல்வது? - ராகுல் கேள்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

அமெரிக்காவின் சிகாகோ கடற்கரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிளில் பயணம் செய்தார்.;

Update:2024-09-04 19:59 IST

கோப்புப்படம் 

சென்னை,

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ கடற்கரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்டு பாடியபடி சைக்கிளில் பயணம் செய்தார். இது தொடர்பான வீடியோவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த பதிவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டேக் செய்து, "சகோதரரே... நாம் எப்போது சென்னையில் ஒன்றாக சைக்கிளிங் செல்வது?" என்று கேட்டு பதிவிட்டார்.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் கேள்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அந்தப் பதிவில் அவர், "அன்பு சகோதரர் ராகுல்காந்தி, உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், ஒன்றாகச் சேர்ந்து சென்னையின் மையப்பகுதியில் பயணம் செய்வோம். நான் உங்களுக்கு ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுக்க வேண்டியது இன்னும் பாக்கி உள்ளது.

நாம் இருவரும் ஒன்றாக சைக்கிள் ஓட்டியபிறகு என்னுடைய வீட்டில் இனிப்புகளுடன் ஒரு சுவையான தென்னிந்திய மதிய உணவை சாப்பிடலாம்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்