இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில் ஜெய் ஸ்ரீராம் என ரசிகர்கள் கூறியதில் என்ன தவறு? - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில் ஜெய் ஸ்ரீராம் என ரசிகர்கள் கூறியதில் என்ன தவறு? என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில், ஜெய்ஸ்ரீராம் என ரசிகர்கள் கூறியதில் என்ன தவறு?. வெற்றியின் வெளிப்பாட்டால் தான் அவர்கள் ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டார்கள். விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்று சொல்கிறார்கள், அதேபோல் சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்.
தெலங்கானாவிலும், புதுச்சேரியிலும் நான் முதல் குடிமகள், அதனால் அங்கு அரசியல் பேசமாட்டேன். ஆனால் தமிழ்நாட்டில் நான் பொது குடிமகள், எனவே இங்கு எனது கருத்தை முழுமையாக பதிவு செய்வேன். சாமானிய மக்களுக்கு பேச்சுரிமை இருக்கும் போது, இந்த தமிழிசைக்கும் பேச்சுரிமை உள்ளது; நான் அரசியல் பேசுவேன்.
எதிர்கட்சியாக இருந்தபோது மு.க.ஸ்டாலினுக்கு இருந்த துணிச்சல், தற்போது ஆளுங்கட்சியாக மாறிய பிறகு காணமால் போய்விட்டது. யாருடைய துணிச்சலும் அவருக்கு இல்லை. புதுச்சேரியில் காலை 7 மணிக்கு லியோ படத்தின் காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுத்தார், ஆனால் பல்வேறு அழுத்தம் காரணமாக படம் 7 மணிக்கு வெளியாகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.