அணையில் மூழ்கிய பட்டதாரி வாலிபர் கதி என்ன?

அருமனை அருகே சிற்றார் அணையில் குளிக்க சென்ற போது பட்டதாரி வாலிபர் தண்ணீரில் மூழ்கினார். அவரது கதி என்னவென்று தெரியாமல் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

Update: 2023-05-21 20:47 GMT

அருமனை:

அருமனை அருகே சிற்றார் அணையில் குளிக்க சென்ற போது பட்டதாரி வாலிபர் தண்ணீரில் மூழ்கினார். அவரது கதி என்னவென்று தெரியாமல் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

பட்டதாரி வாலிபர்

குமரி-கேரள எல்லை பகுதியான வெள்ளறடையை அடுத்த வாழிச்சல் மணக்கரையை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய ஒரே மகன் பிரதீப் (வயது26), பி.எஸ்சி பட்டதாரி. தற்போது பெயிண்டராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலையில் 5 மணியளவில் பிரதீப் தனது நண்பர்கள் 3 பேருடன் அருமனை அருகே உள்ள சிற்றார்-2 அணைக்கு சுற்றுலா வந்தார். அங்கு அணையின் நீர்தேக்கத்தில் வைகுண்டம் பகுதியில் நண்பர்கள் அனைவரும் குளிக்க இறங்கினர். அவர்கள் தண்ணீரில் நீச்சலடித்து மகிழ்ச்சியாக குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பிரதீப் தண்ணீரில் மூழ்கி மாயமானதாக தெரிகிறது. அவரை காணாததால் உடன் வந்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் பிரதீப்பை தண்ணீரில் தேட தொடங்கினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கதி என்ன?

இதுகுறித்து கடையல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கடையல் போலீசார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களின் உதவியுடன் பிரதீப்பை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இரவு வெகுநேரம் வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் நேற்று இரவு தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிைடய பிரதீப் தண்ணீரில் மூழ்கிய தகவல் அறிந்த உறவினர்கள் மிகுந்த சோகம் அடைந்தனர். அவரது கதி என்னவென்று ெதரியாமல் உறவினர்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்