குளத்திற்குள் விழுந்தவர் கதி என்ன?
திருப்பத்தூர் அருகே குளத்திற்குள் விழுந்தவர் கதி என்ன? என தெரியவில்லை. அவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.;
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மேஸ்திரியார் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மகன் சுரேஷ் (வயது 45). இவர் நேற்று காலை குளிப்பதற்காக வீட்டிற்கு அருகில் உள்ள சீதளி குளத்திற்குச் சென்றுள்ளார். குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவர் மாயமாகி விட்டார். அவர் கதி என்ன தெரியவில்லை. இதை பார்த்து அருகில் தெப்பம் கட்டிக்கொண்டிருந்த ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினர் தீவிரமாகத் தேடினார்கள். அவரை பற்றி தகவல் தெரியாததால் ெதாடர்ந்து தேடி வருகிறார்கள்.