நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் காசியாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

Update: 2023-03-09 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் காசியாபுரத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஒன்றிய கவுன்சிலர் ஆலடி எழில்வாணன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்