மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் வளர்மதி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2023-03-13 18:14 GMT

குறைதீர்வு நாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

மொத்தம் 486 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவி

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு தலா ரூ.10 ஆயிரத்து 500 வீதம் சக்கர நாற்காலி, 2 பேருக்கு கையடக்க திறன்பேசி, ஒருவருக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டது.

கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, துணை கலெக்டர் தாரகேஷ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, கலால் உதவி ஆணையர் சத்திய பிரசாத், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்