500 மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள்

செம்பனார்கோவிலில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. வழங்கினார்

Update: 2022-12-20 18:45 GMT

பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா செம்பனார் கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க செயலாளர், நிவேதா முருகன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு 500 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 5 கிலோ அரிசி, போர்வை, ஊட்டச்சத்து பொருட்கள் தென்னங்கன்று மற்றும் ரூ.500 உள்ளிட்ட நல உதவிகளை வழங்கி பேசினார். . விழாவில் தி. மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் ஞானவேலன், செல்வமணி, செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல்மாலிக், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சித்திக் விஜயபாலன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ரவி, ஹர்ஷத், முத்து மகேந்திரன், வின்சென்ட், ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் தகவல் தொழில்நுட்ப அணியினர் உள்பட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்