437 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கொல்லிமலையில் நடந்த வல்வில் ஓரி விழாவில் 437 பயணிகளுக்கு ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வழங்கினார்.

Update: 2023-08-04 18:45 GMT

சேந்தமங்கலம்

வல்வில் ஓரி விழா

கொல்லிமலையில் உள்ள செம்மேட்டில் வல்வில் ஓரி விழாவையொட்டி பல்வேறு துறை கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. அதனை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டார். தொடர்ந்து வல்வில் ஓரி அரங்கில் நடந்த தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், கொக்கலி ஆட்டம், மான் கொம்பு ஆட்டம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், பரதநாட்டியம், தெருக்கூத்து, சேர்வையாட்டம் ஆகியவற்றை கலெக்டர் உமா, பொன்னுசாமி எம்.எல்.ஏ., கொல்லிமலை ஒன்றிய அட்மா குழு சேர்மன் செந்தில் முருகன் ஆகியோர் கண்டுகளித்தனர்.

நலத்திட்ட உதவிகள்

அதைத்தொடர்ந்து அந்த அரங்கத்தில் நிறைவு விழாவையொட்டி வருவாய் துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.4.80 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத் துறை சார்பில் 96 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 23 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், மகளிர் திட்டம் சார்பில் 14 மகளிர் குழுவுக்கு ரூ.98 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 437 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் உமா வழங்கினார்.

மேலும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை திட்ட இயக்குனர் சிவக்குமார், மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, நாமக்கல் உதவி கலெக்டர் சரவணன், வேளாண் இணை இயக்குனர் துரைசாமி உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்