கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் தையல் நாயகி தலைமை தாங்கினார். கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். முகாமில் முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன்கார்டு, விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்ட 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமுதவிஜயரெங்கன், மண்டல துணை தாசில்தார் சந்திரகலா, வட்ட வழங்கல் அலுவலர் நீலாயதாட்சி, ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், ஊராட்சி தலைவர்கள் வைதேகி ராசு, ஜீவா, வருவாய் ஆய்வாளர் சசிகலா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.