கூட்டணி அமைக்காமல் தி.மு.க., அ.தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற முடியாது - கே.பாலகிருஷ்ணன்

தி.மு.க., அ.தி.மு.க. தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெறுவது இயலாத காரியம் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Update: 2024-11-24 21:31 GMT

கோப்புப்படம் 

மதுரை,

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டிய தேர்தலில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. இது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. எவ்வாறு நடந்தது என்று பல கோணங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

எங்களை பொறுத்தவரை கூட்டணி, ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பதை வேறு மாதிரி வைத்திருக்கிறோம். அமைச்சர் பதவி வாங்குவது மட்டும் அதிகார பகிர்வு கிடையாது. கொள்கை ரீதியான திட்டத்தை உருவாக்கி, அந்த திட்டத்தின் அடிப்படையில் கூட்டணியில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வரும்போது அந்த திட்டத்தை செயல்படுத்துகிற கூட்டணி அமைய வேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தமிழகத்தில், தி.மு.க., அ.தி.மு.க. எவ்வளவு பெரிய கட்சிகளாக இருந்தாலும், தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெறுவது இயலாத காரியம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்