நாடார் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி

நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டத்தையொட்டி நாடார் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2022-07-11 19:15 GMT

நெல்லை:

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பில் 8-ம் திருநாள் மண்டகப்படி நடந்தது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் நெல்லை நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வடக்கு ரத வீதியில் நடந்தது. விழாவுக்கு கோபால் நாடார் தலைமை தாங்கினார். நெல்லை நாடார் உறவின்முறை சங்க செயலாளர் எம்.பன்னீர்செல்வம் நாடார், பொருளாளர் வி.ராமச்சந்திரன் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் எஸ்.அசோகன் நாடார் வரவேற்று பேசினார்.

நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், அலெக்ஸ் அப்பாவு, நெல்லை வக்கீல் சங்க செயலாளர் டி.காமராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கேடயம் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார்கள். மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கினர். இதைத்தொடர்ந்து காமராஜர் முழு உருவ வெண்கல சிலை அமைக்க நன்கொடை கொடுத்த டாக்டர் பிரேமச்சந்திரன் நாடார், செந்தில்வேல் நாடார், எஸ்.ஜெ.மகாகிப்ட்சன் நாடார் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

விழாவில் துணைத்தலைவர்கள் தனசீலன் நாடார், அந்தோணி ஜெயபாண்டி நாடார், மகாலிங்கம் நாடார், இணைச்செயலாளர் செல்வராஜ் நாடார், துணை செயலாளர்கள் மனோகர் நாடார், சுரேஷ்நாடார் மற்றும் ஆர்.பி.கே.செல்வகுமார் நாடார், டி.பி.வி.வைகுண்டராஜ நாடார், இளங்கோ நாடார் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் டாக்டர் பிரேமச்சந்திரனின் மெல்லிசை கச்சேரி நடந்தது இதைத்தொடர்ந்து நெல்லை நாடார் உறவின்முறை சங்க கட்டிடத்தில் அன்னதானம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்