10 பேருக்கு ரூ.3½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

திருக்குவளையில் நடந்த ஜமாபந்தியில் 10 பேருக்கு ரூ.3½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2023-05-30 18:45 GMT

வேளாங்கண்ணி:

திருக்குவளை தாலுகாவில் ஜமாபந்தி .நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா தலைமை தாங்கினார். இதில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட 62 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். .இதில் 10 பேருக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா வழங்கினார். நிகழ்ச்சியில் திருக்குவளை தாசில்தார் ராஜ்குமார், தனி தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்