மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருப்பத்தூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2022-09-02 13:44 GMT

திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் அமைப்பின் சார்பில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ஓய்வுபெற்ற மாவட்ட கூட்டுறவு இணைபதிவாளர் நீலமேகம் தலைமை தாங்கினார். பாரஸ்சந்த் ஜெயின் கலந்து கொண்டு 100 மாற்றுத் திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள், அரிசி, வேட்டி, சேலை, பராமரிப்பு உதவித்தொகை ஆகியவை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்தவர் சிவக்குமாக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் தமிழ்ச்செல்வி, அப்துல்ரசாக், சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உதவும் உள்ளங்கள் தலைவர் ரமேஷ் செய்திருந்தார். முடிவில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்