திருவெண்ணெய்நல்லூரில் ஜமாபந்தி நிறைவு விழா:335 பேருக்கு ரூ.2¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்அமைச்சர் பொன்முடி வழங்கினார்

திருவெண்ணெய்நல்லூரில் ஜமாபந்தி நிறைவு விழாவில் 335 பேருக்கு ரூ.2¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

Update: 2023-07-02 18:45 GMT


திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, 335 பேருக்கு ரூ.2 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

இதில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஜெயச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஓம்சிவசக்திவேல், பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் கோமதி நிர்மல்ராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் விஸ்நாதன், சந்திரசேகரன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் சரஸ்வதி, தாசில்தார் ராஜ்குமார், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன், வேளாண்மை பாக்யராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்