248 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

சிட்லிங் ஊராட்சி வேலனூர் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 248 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

Update: 2022-08-17 15:48 GMT

சிட்லிங் ஊராட்சி வேலனூர் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 248 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

அரூர் வட்டம் சிட்லிங் ஊராட்சி வேலனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் தலைமை தாங்கினார் சம்பத்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். உதவி கலெக்டர் விஸ்வநாதன் வரவேற்று பேசினார்.

முகாமில் கலெக்டர் சாந்தி பேசுகையில், தமிழக அரசு மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. கடைக்கோடி மக்களுக்கு அரசின் திட்டங்களை முழுமையாக கொண்டு சேர்க்கும் பணியை மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டங்களை மக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்கள் அளிக்கின்ற அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் துறை வாரியாக உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உரிய தீர்வு விரைந்து காணப்படும் என்று கூறினார்.

வீட்டுமனை பட்டா

இந்த முகாமில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா, இணைய வழி பட்டா, இருளர் சாதி சான்றிதழ், உட்பிரிவு பட்டா மாற்றம் மற்றும் பட்டா மாறுதல் உத்தரவு என மொத்தம் 248 பயனாளிகளுக்கு ரூ.87,55,538 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

இந்த முகாமில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், ஒன்றியக்குழு தலைவர் பொன்மலர் பசுபதி, மாவட்ட கவுன்சிலர் சரளா சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்