132 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவிகள்

நடுப்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 132 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2022-06-29 16:13 GMT

தர்மபுரி:

தர்மபுரி ஒன்றியம் நடுப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தலைமை தாங்கினார். கோவிந்தசாமி எம்.எல்.ஏ., ஊராட்சி மன்ற தலைவர் அமுதா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து 132 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர். இந்த முகாமில் ஒன்றிய குழுத்தலைவர் நீலாபுரம் செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர் சரவணன், தாசில்தார் ராஜராஜன், கிராம நிர்வாக அலுவலர் சசிபூசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கால்நடை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை ஆகிய துறைகள் சார்பில் பல்துறை பணி விளக்க கண்காட்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்