வேளாங்கண்ணி- பெங்களூரு வாராந்திர சிறப்பு ரெயிலுக்கு வரவேற்பு
நாகைக்கு வந்த வேளாங்கண்ணி- பெங்களூரு வாராந்திர சிறப்பு ரெயிலுக்கு வரவேற்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேளாங்கண்ணி - பெங்களூரு வாராந்திர சிறப்பு ெரயில் 25-ந்தேதி முதல் இயக்கப்படும் என ரெயில்ேவ துறை அறிவித்தது. அதன்படி இந்த வாராந்திர சிறப்பு ரெயில் பெங்களூருவில் நேற்று முன்தினம் காலை (25-ந் தேதி) புறப்பட்டு நாகை ரெயில் நிலையத்துக்கு இரவு வந்தடைந்தது. இந்த ரெயிலை நாகூர் - நாகை ெரயில் உபயோகிப்பாளர் நலசங்க தலைவர் மோகன், பொருளாளர் பாலா ஆகியோர் வரவேற்றனர். இதை தொடர்ந்து ெரயில் என்ஜின் டிரைவர் பாலசுந்தர், உதவி என்ஜின் டிரைவர் சுரேந்தர், நாகை ெரயில்வே நிலைய மேலாளர் வரதராஜன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தினர். இந்த ரெயில் வருகிற 1, 8, 15 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணி-பெங்களூரு இடையே இயக்கப்படுகிறது.