மதுரை மாநாடு பிரசார வாகனத்துக்கு வரவேற்பு
ஆம்பூர் நகர அ.தி.மு.க. சார்பில் மதுரை மாநாடு பிரசார வாகனத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரையில் அ.தி.மு.க. பொன் விழா எழுச்சி மாநாடு வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மாநாடு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார்.
மாநிலம் முழுவதும் செல்லும் இந்த வாகனம் நேற்று ஆம்பூர் பஸ் நிலையத்திற்கு வந்தடைத்தது. அங்கு ஆம்பூர் நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் மதியழகன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி சதீஷ்குமார், வாணியம்பாடி எம்.எல்.ஏ. செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் டில்லி பாபு, மாதனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜோதிராமலிங்க ராஜா மற்றும் கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.