ராமராஜ்ய ரத யாத்திரைக்கு வரவேற்பு
சின்னசேலம் வந்த ராமராஜ்ய ரத யாத்திரையை பக்தர்கள் வரவேற்று வழிபட்டனர்.
சின்னசேலம்,
அயோத்தியில் புறப்பட்ட ராம ராஜ்ய ரத யாத்திரை ஜம்மு, காஷ்மீர், கன்னியாகுமரி, மதுரை, சேலம், வழியாக நேற்று சின்னசேலம் வந்தது. இந்த ரதயாத்திரையை பக்த ஆஞ்சநேயர் கோவில் முன்பு பக்தர்கள் வரவேற்று வழிபட்டனர். பின்னர் கோவில் சார்பில் ராமருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ரத யாத்திரை அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த ரதயாத்திரை வருகிற 30-ந்தேதி அயோத்தியை சென்றடையும் என ரதயாத்திரை குழுவினர் தெரிவித்தனர்.