பாரதி- செல்லம்மாள் ரதத்துக்கு வரவேற்பு

பாவூர்சத்திரம் அருகே தோரணமலையில் பாரதி- செல்லம்மாள் ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-05-29 16:47 GMT

பாவூர்சத்திரம்:

சென்னை சேவாலயா செல்லம்மாள் பாரதி கற்றல் மையம் சார்பில் பாரதி, செல்லம்மாள் உருவச்சிலை அமைக்கப்பட்டு, ரதம் மூலம் தமிழகம், புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த ரதமானது தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் வளாகத்திற்கு நேற்று வந்தது. இந்த ரதத்திற்கு கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தலைமையில் தோரணமலை பக்தர்கள், பொதுமக்கள் சார்பில் சீர்வரிசை எடுத்து வந்து, மாலை அணிவித்தும், மலர் தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவருக்கும், பாரதி-செல்லம்மாள் சிலைக்கும் தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த ரதமானது நாளை (செவ்வாய்க்கிழமை) கடையம் சென்றடைகிறது. இச்சிலையானது பாரதி-செல்லம்மாளின் 125-து திருமண நாளையொட்டி திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சேவாலயா அமைப்பினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்