முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு விழா
உளுந்தூர்பேட்டை சாரதா மகாவித்யாலயம் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு விழா
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா மகாவித்யாலயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிரஸ்சர்ஸ் டே என்ற தலைப்பில் முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் கல்லூரி செயலாளர் யத்தீஸ்வரி அனந்த ப்ரேம ப்ரியா அம்பா ஆசியுரை வழங்கினார். இணை செயலாளர் ப்ரம்மச்சாரிணி ப்ரேம ப்ரணா மாஜி வாழ்த்தி பேசினார். முதல்வர் பழனியம்மாள் சிறப்புரையாற்றினார். விழாவில் முதலாம் ஆண்டு மாணவிகளை வரவேற்கும் வகையில் இளங்கலை 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவிகள் முதுகலை மாணவிகளோடு இணைந்து கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். விழாவை வணிகவியல் துறை தலைவர் லெட்சுமி ப்ரியா, ஆங்கிலதுறைத்தலைவர் பிரபாவதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.