தாம்பரம் - நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்
பயணிகளின் வசதிக்காக வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவிலில் இருந்து வரும் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012) மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வரும் 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) காலை 7.05 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06011) அதேநாள் இரவு 8.25 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.