களைகட்டிய உறியடி திருவிழா

கோகுலாஷ்டமிையயொட்டி, தலைவாசல் அருகே மணிவிழுந்தான் தெற்கு புதூர் கிராமத்தில் உறியடி திருவிழா களை கட்டியது;

Update: 2022-08-20 20:07 GMT

தலைவாசல்:-

கோகுலாஷ்டமிையயொட்டி, தலைவாசல் அருகே மணிவிழுந்தான் தெற்கு புதூர் கிராமத்தில் உறியடி திருவிழா களை கட்டியது.

கோகுலாஷ்டமி

தலைவாசல் அருகே மணி விழுந்தான் தெற்கு புதூர் கிராமத்தில், கோகுலாஷ்டமியையொட்டி இந்துக்கள் தங்கள் வீடுகளில் கிருஷ்ணன் உருவப்படம் மற்றும் சிலை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். வெண்ணை, பால், தயிர் மற்றும் சீடை, எள்ளுருண்டை, கடலை உருண்டை ஆகியவற்றை கிருஷ்ணருக்கு படைத்து வழிபட்டனர்.

இதையடுத்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வரதராஜ பெருமாள் சாமியை ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோகுலாஷ்டமியின் சிகர நிகழ்ச்சியாக, சிறுவர்கள் கிருஷ்ணர் வேடம் அணிந்து வெண்ணை திருடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உறியடி திருவிழா

தொடர்ந்து உறியடி திருவிழா நடந்தது. இதில் வாலிபர்கள் கண்களை கட்டிக்கொண்டு உறியடித்தனர். இதன் தொடர்ச்சியாக வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. கண்ணன் பிறப்பு பற்றிய பாடல்கள் பாடி கும்மியடித்தனர். விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கினர். கிராமத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதேபோல் புத்தூர் கிராமத்தில் உறியடி திருவிழா மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. கண்ணன் பிறப்பு பற்றி பாடல் பாடி ஆடி மகிழ்ந்தனர். பக்தர்கள் திருப்பாவை பாடி மகிழ்ந்தனர். புத்தூர் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்