கோவில்பட்டியில் புதன்கிழமைதபால்தலை கண்காட்சி

கோவில்பட்டியில் புதன்கிழமை தபால்தலை கண்காட்சி நடக்கிறது.

Update: 2023-10-09 18:45 GMT

கோவில்பட்டி(மேற்கு):

கோவில்பட்டி கோட்ட அஞ்சல் கண்காணிப் பாளர் சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் தபால்தலை கண்காட்சி நடைபெறுகிறது கண்காட்சியை மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பார்வையிடலாம்.

நாளைமறுநாள் (வியாழக்கிழமை) வாடிக்கையாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் புதிய சேமிப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு கணக்கு, மகளிர் சேமிப்பு கணக்கு மற்றும் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் தொடங்க வசதியாக பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும், என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்