கடலூர் வருகிற 29-ந் தேதி சில்வர் பீச்சில் நெய்தல் புத்தக திருவிழா
கடலூர் சில்வர் பீச்சில் நெய்தல் புத்தக திருவிழா வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது
தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து கடலூர், மாவட்டமாக பிரிந்து 30 ஆண்டுகள் ஆகின்றது. இதனை கொண்டாடும் வகையில் "கடலூர் 30" என்ற தலைப்பில் 'நெய்தல் புத்தக திருவிழா' நடைபெற உள்ளது. அதாவது 110 அரங்குகள் கொண்ட பிரமாண்ட புத்தகத் திருவிழா, கடலூர் சில்வர் பீச்சில் வருகிற 29-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசுத் துறைத் திட்டங்கள் குறித்த கொள்கை விளக்க பொருட்காட்சிகள், பள்ளிக் கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள், பிரபல பேச்சாளர்களின் பட்டிமன்றம், சொற்பொழிவுகள், ஊக்க உரை, இன்னிசைக் கச்சேரி ஆகியவைகள் நடக்கிறது. எனவே, இந்த புத்தக திருவிழாவிற்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.