விசைத்தறியில் பட்டுச்சேைல உற்பத்தி செய்வதை கண்டித்து நெசவாளர்கள் மறியல்

செய்யாறில் தடையை மீறி விசைத்தறிகளில் பட்டுச்ேசலை உற்பத்தி செய்யப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கைத்தறி நெசவாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-25 18:08 GMT

செய்யாறில் தடையை மீறி விசைத்தறிகளில் பட்டுச்ேசலை உற்பத்தி செய்யப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கைத்தறி நெசவாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பாரம்பரிய பட்டு

செய்யாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கைத்தறியில் பாரம்பரிய பட்டு சேலைகளை நெய்து நெசவாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கைத்தறியில் தயாரிக்கக் கூடிய பட்டு சேலைகளை கடந்த சில மாதங்களாக விசைத்தறியில் தயாரிக்கப்படுவதாகத் தெரிகிறது.

ரக ஒதுக்கீட்டு சட்டத்தின்படி விசைத்தறிகளில் பட்டுச்சேலை தயாரிக்க தடை உள்ளது. அதனை மீறி விசைத்தறி கூடங்களில் பட்டுச்சேலை தயாரிப்பதால் கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பட்டு கைத்தறி நெசவாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலையில் உள்ள நெசவாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், சேவை மையத்தைச் சேர்ந்த இணை இயக்குனர் இளங்கோவன், ஆய்வாளர் மோகன்ராம் ஆகியோர் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் செய்யாறு திருவோத்தூர் பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது விசைத்தறிகளில் பாரம்பரிய பட்டு சேலைகளை நெசவு செய்து கொண்டு இருந்ததைக் கண்டு பிடித்தனர். உடனே ஐந்து விசைத்தறிகளில் இருந்த, 5 பட்டு சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சாலைமறியல்

இந்நிலையில் கைத்தறி தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து செய்யாறு-வந்தவாசி சாலையில் பெரியார் சிலை அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த செய்யாறு காவல் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து சாலை மறியலை கைவிட செய்தனர்.

அதேப் போல் பாரம்பரிய கைத்தறி பட்டு ரகங்களை விசைத்தறியில் நெய்யக் கூடாது என விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆய்வுக்கு வந்த சேவை மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்