குப்பையில்லா நகரமாகதர்மபுரி நகராட்சி உருவாக்குவோம்

குப்பையில்லா நகரமாக தர்மபுரி நகராட்சியை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கலெக்டர் திவ்யதர்சினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-06-03 18:32 GMT

தர்மபுரி:

குப்பையில்லா நகரமாக தர்மபுரி நகராட்சியை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கலெக்டர் திவ்யதர்சினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் இயக்கம்

தர்மபுரி நகராட்சியின் சார்பில் என் நகரம், என் பெருமை - நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடக்க விழா தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். டாக்டர் செந்தில்குமார் எம்.பி., நகராட்சித் தலைவர் லட்சுமி நாட்டான்மாது, முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் எம்.பி. எம்.ஜி. சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் வரவேற்றார்.

விழாவில் கலெக்டர் திவ்யதர்சினி என் நகரம், என் பெருமை - நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் தலைமையில் அனைவரும் தூய்மை உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். விழாவில் கலெக்டர் பேசுகையில், குப்பையில்லாத நகரமாக தர்மபுரி நகராட்சி உருவாக்க அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இதேபோன்று குப்பையில்லாத தர்மபுரி மாவட்டத்தையும் உருவாக்கிட அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கூறினார்.

இயற்கை உரம்

நிகழ்ச்சியில் கலெக்டர் பொதுமக்களுக்கு குப்பை தரம் பிரிக்கும் கூடைகளையும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து மீண்டும் மஞ்சள் பைகளை பயன்படுத்துவோம் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துணிப்பைகளையும், விவசாயிகளுக்கு நகராட்சியின் மூலம் தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களையும் வழங்கினார்.

நகராட்சி துணைத்தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், தாசில்தார் ராஜராஜன், துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், ரமண சரண், நாகராஜன், சீனிவாசலு மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்