நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-03 18:45 GMT

ஆர்ப்பாட்டம்

காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்து தமிழர்களை தாக்கும் கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாஸ் தலைமை தாங்கினார். இதில், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் மணிசெந்தில் பேசினார்.

கோஷங்கள் எழுப்பினர்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு முடிவுக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி நீர் தொடர்பான உரிய நடவடிக்கை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் முகமது யூசுப், மாநில சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர் காசிராமன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன், மண்டல செயலாளர் கலியபெருமாள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கர்நாடக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்