மாநகரில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம்

மாநகரில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-06-07 19:18 GMT

திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீருந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான குழாயில் திருச்சி - சென்னை மெயின்ரோடு பால்பண்னை அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பழுதை மராமத்து செய்யும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதனால், தேவதானம், விறகுபேட்டை, கல்லுக்குழி, ஜெகநாதப்புரம், அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, சங்கிலியாண்டபுரம் மற்றும் மகாலட்சுமி நகர் ஆகிய பகுதியில் உள்ள 11 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலம் வழங்கப்படும் பகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) குடிநீர் வினியோகம் இருக்காது. நாளை (வெள்ளிக்கிழமை) வழக்கம் போல் குடிநீர் வினியோகம் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்