பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் நீர்திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் நீர்திறக்கப்படுகிறது.

Update: 2022-08-12 01:45 GMT

ஈரோடு,

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண்அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இங்கு பெய்த கனமழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து. அணை நீர்மட்டம் 102 அடியாக உள்ளது.

இந்த நிலையில், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று முதல் 120 நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூரில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்