பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து குளத்திற்கு தண்ணீர் திறப்பு

பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து குளத்திற்கு தண்ணீர் திறப்பு

Update: 2022-11-03 10:41 GMT

வெள்ளகோவில்

வெள்ளகோவில் நகராட்சியில் தமிழ்நாடு நகர்புற வேலை வாய்ப்பு 2021- 22 திட்டத்தின் கீழ் வார்டு எண் 2. உப்புபாளையத்தில் உள்ள குளத்தை ரூ.30 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் குளம் சீரமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது. தற்போது தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முயற்சியில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் இருந்து குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு, தற்போது குளத்திற்கு நீர் வந்து கொண்டுள்ளது.

இந்த குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் குடிநீர் ஆள் குழாய் கிணறுகளில் நீர் நிலை உயர வாய்ப்புள்ளது. நீர் வரத்தால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்