சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரால் மக்கள் அவதி

சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரால் மக்கள் அவதி

Update: 2022-08-23 18:34 GMT

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அதிகாாிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் தேங்கும் தண்ணீர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, மணக்கரை, நடுத்தெருவில் இருந்து பாலக்குறிச்சி செல்லும் சாலையோரத்தில், அங்குள்ள குளங்களுக்கு வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீர் செல்வதற்காக வாய்க்கால் உள்ளது. இங்குள்ள சாலை பள்ளமாகவும், வாய்க்கால் மேடாகவும் இருந்து வருகிறது. இதனால், ஆண்டுதோறும் ஆற்றில் தண்ணீர் வரும் போது வாய்க்கால் மூலம் குளத்திற்கு செல்லும் தண்ணீர் பள்ளமாக உள்ள சாலையில் வழிந்து சென்று சாலையில் தேங்கி நிற்கும் அவலம் உள்ளது.

சீரமைக்க கோாிக்ைக

குறிப்பாக மழைக்காலங்களில் மழைநீரும் அதிக அளவில் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம், ரேஷன் கடை, நெல் கொள்முதல் நிலையம், அருகில் உள்ள பள்ளிகள் போன்ற இடங்களுக்கு செல்லும் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் பள்ளி வாகனங்கள் மற்றும் நெல் கொள்முதல் நிலையத்துக்கு சென்று வரும் வாகனங்கள் மிகுந்த இடையூறை சந்தி்க்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்