கண்மாய்களுக்கு அதிக நீர்வரத்து

கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2022-10-23 18:45 GMT

மானாமதுரை,

மானாமதுரை முத்தனேந்தல், குவளைவேலி கண்மாய்க்கு தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் குவளைவேலி கண்மாய் வரத்துக்கால் கலுங்கு மற்றும் குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்தனர். மேற்கண்ட இடங்களில் பொதுப்பணித்துறையினரால் கலுங்கு சரி செய்யப்பட்டது. மேலும், தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் மேற்கு புறத்தில் கருவக்குடி கண்மாய்க்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. குவளைவேலி கண்மாய் கழுங்கை அடைக்கக்கூடாது என குவளைவேலி கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப் பட்டு, குவளைவேலி கண்மாயின் நீர் நிலைமை, விளத்தூர் காலனி குடியிருப்பில் இருந்த வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீர் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, உரிய பணிகளை மேற்கொள்ள அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதி தாசன், உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், உதவிப் பொறியாளர்கள் செந்தில்குமார், பூமிநாதன், மானாமதுரை தாசில்தார் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஜினி தேவி, சங்கர பரமேசுவரி உள்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்