நீர்நிலைகளை வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்

பட்டா நிலங்களில் உள்ள நீர்நிலைகளை வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்;

Update:2023-03-22 00:15 IST


மயிலாடுதுறை மாவட்ட கலெக்்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாய மற்றும் தனிநபர் பட்டா நிலங்களில் உள்ள பண்ணைக்குட்டைகள், மீன்வளர்ப்பு குட்டைகள் ஆகிய நீர்நிலைகளை கதவுடன் கூடிய கம்பி வேலி அல்லது தாவர வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும். நீர்நிலைகளில் பொதுமக்கள் நுழைந்து உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நிர்நிலைகளின் பட்டாதாரர்களே பொறுப்கேற்க வேண்டும். அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பட்டா நிலங்களில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் கதவுடன் கூடிய வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்