நீர்நிலைகளை தூா்வார வேண்டும்

நீர்நிலைகளை தூர்வார வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.

Update: 2023-05-03 19:36 GMT

அருப்புக்கோட்டை, 

விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி சார்பில் செயற்குழு கூட்டம் கஞ்சநாயக்கன்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட பார்வையாளர்கள் ராஜேஷ், குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயி அணி மாவட்ட பொது செயலாளர் அழகர்சாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜ.க. விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், துணைத்தலைவர்கள் தேவர், ஜெயக்குமார், செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். நீர்நிலைகளை தூர்வார வேண்டும். ஆனைக்குட்டம் அணை ஷட்டரை சீரமைக்க வேண்டும். காட்டுப்பன்றிகள் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் விவசாய அணி மாவட்ட பொது செயலாளர் முனியசாமி நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்