கிறிஸ்தவ ஆலயங்களுக்கு சாலை, குடிநீர் வசதி

கிறிஸ்தவ ஆலயங்களுக்கு சாலை, குடிநீர் வசதி செய்து தரப்படும் என்று அமைச்சர் கூறினார்.

Update: 2022-08-15 19:18 GMT

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள சுவிசேஷபுரம் ஏசு நம்மோடு திருச்சபையில் விடுதலைப் பெருவிழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் அமைச்சர் பேசியதாவது:- சிறுபான்மையினருக்கு தமிழக அரசு ஆதரவு கொடுத்து வருகிறது. மக்களுடைய அனைத்து நலத்திட்டங்களையும் அடிப்படை வசதிகளையும் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு சாலை, குடிநீர் வசதி, மின்சாரம் நிறைவேற்றிதரப்படும். இவ்வாறு அவர் பேசினார். சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். அருட்தந்தை பெர்க்மான்ஸ், போதகர் பாஸ்டர் லியோ ஆண்டனி உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக முதுகுளத்தூர் அருகே உள்ள உடைகுளம் கிராமத்தில் ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப பள்ளி கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், ஒன்றிய செயலாளர்கள் பூபதி மணி, ஜெயபால், ஒன்றிய பொறுப் பாளர் ஆறுமுகவேல், ஒன்றிய கவுன்சிலர் நாகஜோதி ராமர் ,மகிண்டி ஊராட்சி தலைவர் சூரியகுமார், தி.மு.க. நிர்வாகிகள் பொதிகுளம் போகர், கோவிந்தன், வாகைகுளம் அர்ஜுனன், முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக உதவியாளர்கள் சத்தியேந்திரன், டோனி தாமஸ், ரஞ்சித் மணிகண்டன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்