நாகை மாவட்டம் அந்தனபேட்டை தெற்கு வீதியில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர்குழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாய் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாக செல்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் நீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவன், அந்தனபேட்டை, நாகப்பட்டினம்.