திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட வால்வு வழியாக வீணாகும் குடிநீர்

சிந்திலுப்பு கிராமத்தில் திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் வால்வு வழியாக குடிநீர் வீணாகி வருகிறது.

Update: 2022-10-29 17:49 GMT

சிந்திலுப்பு கிராமத்தில் திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் வால்வு வழியாக குடிநீர் வீணாகி வருகிறது.

திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டம்

குடிமங்கலம் ஒன்றியத்தில் 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறது. திருமூர்த்தி அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் பொட்டயம் பாளையம், சுங்கார மடக்கு, இலுப்ப நகரம் உள்ளிட்டநீருந்து நிலையங்கள் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அணிக்கடவு ஊராட்சி சிந்துலுப்பு கிராமத்தில் திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட வால்வு உள்ளது. இந்தநிலையில் இந்த வால்வில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது.

சுகாதார சீர்கேடு

குடிநீர் திட்ட வால்வில் இருந்து இவ்வாறு வெளியேறிய குடிநீர் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் தேங்கி கிடக்கிறது. இதனால் தண்ணீர் நிறம்மாறி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.கழிவுநீர் போல் குடிநீர் தேங்கி கிடப்பதால் குடிநீருடன் அந்த கழிவுநீரும் கலக்கும் அபாயம் உள்ளது.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. திருமூர்த்தி கூட்டு குடிநீர்திட்ட வால்வு வழியாக வெளியேறும் கசிவுநீரை நிறுத்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் தண்ணீர் வீணாவதை தடு்த்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் தட்டுபாடின்றி கிடைக்க செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்