புழல் சிறை வளாகத்தில் வார்டன் தூக்கிட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை

திருவள்ளூர் மத்திய புழல் சிறை வளாகத்தில் வார்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

Update: 2022-05-28 05:05 GMT


திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் காசிராமன்(வயது 29) .இவர் மத்திய புழல் சிறையில் விசாரணை கைதி சிறையில் கடந்த 5 வருடங்களாக வார்டனாக பணியாற்றி வருகிறார்.

இவர் புழல் சிறை வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில் காசிராமன் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புழல் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இது தொடர்பாக  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்