தஞ்சாவூர் நடைப்பயிற்சி சங்கத்தின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் ராஜாராமன் தலைமையில் நடந்தது. செயலாளர் கணேசன், துணை த்தலைவர்கள் ஆறுமுகம், நாகம்மாள், பொருளாளர் பன்னீர்செல்வம், மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட சங்கத்தின் மகளிர் அணி உறுப்பினர்களுக்கு தஞ்சை காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவ அதிகாரி டாக்டர் ஐஸ்வர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சேலைகள் வழங்கி பேசினார்.
கூட்டத்தில் ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகரன், ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்மணி மற்றும் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மகளிரணியை சேர்ந்த மஞ்சுளா வரவேற்றார். முடிவில் ஓய்வுபெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டும், நடைப்பயிற்சி சங்கத்தின் நிறுவனருமான அல்மாஸ் அலி நன்றி கூறினார்.