தூய்மை காவலர்களுக்குகாலதாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும்கடலூரில் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி
தூய்மை காவலர்களுக்கு காலதாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்று கடலூரில் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி தொிவித்தாா்.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக அரசின் பட்ஜெட்டில், ஊராட்சி தூய்மை காவலர்களுக்கான ஊதியத்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் வரவேற்கிறது. அதேநேரம் தூய்மை காவலர்களுக்கு ஊதியம் காலதாமதமாக வழங்கப்படுகிறது.
இதை கவனத்தில் கொண்டு ஊராட்சி நிர்வாகமே தூய்மை காவலர்களுக்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்தல் அறிக்கையில் கூறியபடி தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.