வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை

சி.பி.எஸ்.இ. தேர்வில் வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

Update: 2022-07-23 20:06 GMT

திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய 45 மாணவர்களும், 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 56 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இத்தேர்வில் 26 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்றனர்.

மாணவி ஷெனா 500-க்கு 481 மதிப்பெண்களும், மாணவி லிட்ரிசியா 479 மதிப்பெண்களும், மாணவி ஜெயா 468 மதிப்பெண்களும் பெற்றனர். 8 மாணவர்கள் சில பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், 25 மாணவர்கள் 90-க்கு அதிகமான மதிப்பெண்களும் பெற்றனர். ஆங்கிலத்தில் 13 மாணவர்களும், கணிதத்தில் 9 மாணவர்களும், அறிவியலில் 11 மாணவர்களும், சமூக அறிவியலில் 7 மாணவர்களும் 90-க்கு அதிகமான மதிப்பெண்களை பெற்றனர்.

12-ம் வகுப்பில் ஆங்கிலத்தில் 15 மாணவர்களும், வேதியியலில் 7 மாணவர்களும், உயிரியலில் 5 மாணவர்களும், வணிகவியலில் 4 மாணவர்களும் 90-க்கு அதிகமான மதிப்பெண்களை பெற்றனர்.

தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளையும், அவர்களுடைய பெற்றோர்களையும் மற்றும் 400-க்கு அதிகமான மதிப்பெண்களை பெற்ற அனைத்து மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும், பள்ளி சார்பாக தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பொன்னாடை அணிவித்து பதக்கம் மற்றும் கேடயங்களை வழங்கி கவுரவித்தார். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி முதல்வர் எலிசபெத் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்