பேருந்து நிழற்குடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்

சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடந்து உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.;

Update:2022-11-08 18:57 IST

விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் ஓராண்டாக சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேருந்து நிழற்குடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 10 வயது சிறுவன் உயிரிழந்தான்.

சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடந்து உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்