வாக்குச்சீட்டுகளை பறித்து சென்றவரால் பரபரப்பு

ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து கழக தி.மு.க. தொ.மு.ச. தேர்தல் நடைபெற்றபோது வாக்குச்சீட்டுகளை வேட்பாளர் பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-07-20 18:57 IST


ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து கழக தி.மு.க. தொ.மு.ச. தேர்தல் நடைபெற்றபோது வாக்குச்சீட்டுகளை வேட்பாளர் பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல்

கும்பகோணம் போக்குவரத்து கழக கோட்டம் காரைக்குடி மண்டலத்தின் ராமநாதபுரம் புறநகர் கிளையின் போக்கு வரத்து கழக தி.மு.க. தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடைபெற்றது.

ராமநாதபுரம் புறநகர் கிளை பணிமனையில் தேர்தல் அலுவலர் மதுரை செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தலில் செல்வகுமார் என்பவரின் அணியில் கண்ணன் என்பவர் தலைவருக்கும், செல்வகுமார் செயலாளருக்கும், நாகராஜ் என்பவர் பொருளாளருக்கும் போட்டியிட்டனர்.

தனபால் என்பவர் அணியில் அரசமணி தலைவருக்கும், தனபால் செயலாளருக்கும், சத்தியேந்திரன் பொருளாள ருக்கும் போட்டியிட்டனர். தேர்தலையொட்டி ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

பரபரப்பு

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது திடீரென்று செயலாளருக்கு போட்டியிட்ட ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரை சேர்ந்த தனபால் என்பவர் வாக்கு சீட்டுகளை பறித்து கொண்டு வெளியே தப்பி ஓடினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் அலுவலர் மற்றும் செல்வகுமார் அணியினர், போக்குவரத்து கழகத்தினர் கத்தி கூச்சலிட்டபடி விரட்டி வந்தனர்.

இதனை கண்ட போலீசார் விரட்டி சென்று வாக்குச் சீட்டுகளை பத்திரமாக கைப்பற்றி கொண்டு வந்து ஒப்படைத் தனர்.

இதுகுறித்து போலீசாரிடம் விசாரித்தபோது மேற்கண்ட தனபால் தேர்தலில் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டதால் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு செயலா ளராக செல்வகுமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து கழக தி.மு.க. தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தலில் தி.மு.க. வேட்பாளரே வாக்கு சீட்டுகளை பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்