நாமக்கல் அருகே தனியார் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

நாமக்கல், ராசிபுரம் அருகே தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.;

Update:2023-07-13 19:03 IST

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குருசாமி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில், 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் குருசாமிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மாணவ, மாணவிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

கடந்த மார்ச் 9-ம் தேதி சத்து மாத்திரை சாப்பிட்ட ஊட்டியைச் சேர்ந்த மாணவி பாத்திமா மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்