ஓசூர் அரசு பள்ளி மாணவிகள் வெற்றி

கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் ஓசூர் அரசு பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர்.

Update: 2022-11-02 18:45 GMT

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 9 மண்டலங்கள் கலந்து கொண்டன. இதில் ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவிலும், 17 வயதிற்கு உட்பட்ட பிரிவிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த மாதம் இறுதியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் அவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிகளை, தலைமை ஆசிரியர் லதா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, உடற்கல்வி ஆசிரியர் முருகேஸ்வரி மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்