ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை பார்வையிட்டபள்ளி மாணவ-மாணவிகள்
ஆதிச்சநல்லூர்சைட் மியூசியத்தை பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
ஸ்ரீவைகுண்டம்:
ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணியில் 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், மண்பாண்டங்கள், தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம், வெண்கலப்பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பொருட்கள் கண்ணாடி பேழைகளில் வைக்கப்பட்டு, சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சைட்மியூசியத்தை கடந்த மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். அன்று முதல் இந்த மியூசியத்தை ஏராளமான கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.
நேற்று காலையில் நெல்லை ரோஸ்மேரி மாடல் பப்ளிக் பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியை மாலின் பிரமிளா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் சைட்மியூசியத்துக்கு வந்தனர். அவர்கள் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள அகழாய்வு பொருட்களை பார்வையிட்டனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆய்வு மாணவர் ராஜேஸ் ஆகியோர் அவர்களுக்கு விளக்கமளித்தனர்.